தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சார திருத்தச் சட்ட வரைவு: திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம்! - போராட்டம் செய்த விவசாயிகள் கைது

மின்சார திருத்தச் சட்ட வரைவு உள்ளிட்ட பல்வேறு சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி தருமபுரி, பெரம்பலூர் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

By

Published : Jun 10, 2020, 1:27 PM IST

பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு விவசாய சங்கத்தினர், இடதுசாரி கட்சிகள் சார்பாக மத்திய அரசின் அவசர சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை தலைமை ஏற்று நடத்தினார்.

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு வழங்கிவருகின்ற இலவச மின்சாரத்தை ரத்துசெய்யும் வகையில் அமல்படுத்தப்பட்ட மின்சார திருத்தச்சட்ட வரைவைத் திரும்பப்பெற இப்போராட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச்சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம், சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

இதைத் தொடர்ந்து சட்ட நகல்களை விவசாயிகள் எரித்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

இதைப் போலவே, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955 மாற்றி அமைப்பதைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு விவசாயப் பொருள்களை வாங்கி, வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்கும் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, சாலைமறியலில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்டோரை பென்னாகரம் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: லேஸ், குர்குரே அடைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை!

ABOUT THE AUTHOR

...view details