கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தாண்டு மாற்றுப் பயிராக சம்பங்கி பயிரிட்ட பெரும்பாலான விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
முருக்கன்குடி, வாலிகண்டபுரம், பென்னாகரம், பேரளி, காருகுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் தற்போது சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது.
பூவுக்கு நிவாரணம் கேட்கும் விவசாயிகள் 8 மாதத்திற்கு முன்பே இவை பயிரிடப்பட்டதால் தற்போது அறுவடைசெய்யும் நிலையில் உள்ளது. ஆனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அறுவடைக்குச் செல்ல முடியாமல் பூ செடியிலேயே வீணாகிவருகிறது.
இதனால், தாங்கள் கடன் வாங்கி பயிரிட்ட அனைத்தும் வீணாகச் செல்கிறது என வருத்தமடைந்த விவசாயிகள் அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாதிப்படைந்த தர்பூசணி வியாபாரம்: நிவாரணம் வழங்க வியாபாரிகள் கோரிக்கை