தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெங்காய மாலை அணிந்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது - சின்ன வெங்காயத்திற்கு நஷ்ட ஈடு

பெரம்பலூர்: வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயத்திற்கு நஷ் ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

onion garment
onion garment

By

Published : Jan 8, 2020, 4:41 PM IST

நாடு தழுவிய அளவில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து விவசாய தொழிற்சங்கம் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயக் கடனுக்கான வட்டி மானியத்தை நிறுத்தக் கூடாது, கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி பணத்தை உடனடியாக வழங்க வேண்டும், வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், விவசாயிகளின் விளைபொருளுக்கு உற்பத்தி செலவோடு சேர்த்து 50 விழுக்காடு கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

வெங்காய மாலை அணிந்து நூதன முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

இந்தப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயத்தை மாலையாக அணிந்து விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளைக் காவக் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க:செயற்கை மகரந்தச் சேர்க்கை செய்யும் செங்காந்தள் விதை!

ABOUT THE AUTHOR

...view details