தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும் - விவசாயிகள் சங்கம் கோரிக்கை - farmers protest in perambalur

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடனை தள்ளுபடி செய்தது போல, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கைதட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

farmers protest in perambalur
farmers protest in perambalur

By

Published : Feb 7, 2021, 7:14 AM IST

பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையம் பகுதியில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் கைதட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாயிகளுக்குப் பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும், மின் வாரியத்தைத் தனியார் மயமாக்கக் கூடாது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சலுகை தொடர வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து, நெல், மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் தொடர் மழையினால் சாகுபடி செய்து பாதிக்கப்பட்டுள்ள, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளைத் தட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details