தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல் கொள்முதலில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை: உழவர்கள் போராட்டம் - Farmers protest

பெரம்பலூர்: உழவர்கள் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Farmers protest
Farmers protest

By

Published : May 1, 2021, 7:34 AM IST

பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது. இதனைச் சுற்றி பூலாம்பாடி, கடம்பூர், கள்ளபட்டி, பெரியம்மாபாளையம், வெங்கலம், உடும்பியம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் உள்ளனர்.

இங்கு டோக்கன் முறையில் நாளொன்றுக்கு 600 சிப்பம், மூட்டை கணக்கில் 300 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக உழவர்களைப் புறக்கணித்துவிட்டு வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. அது தொடர்பாக உழவர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என நெல்கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு அவர்களது உயர் அலுவலர்கள் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இருந்த போதும் அதனையும் மீறி தொடர்ந்து வியாபாரிகளிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கே முன்னுரிமை கொடுத்துவந்ததாகத் தெரிகிறது.

மேலும் மாவட்ட ஆட்சியர் வரை கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளதாக நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் உழவர்கள் நெல்லை விற்பதற்கு குறைந்தபட்சம் 25 நாள்கள் வரை காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உழவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நெல்கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்ததற்கான ஆதாரங்களுடன் உழவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளின் பெயரை அடித்துத் திருத்தியும் வேறு பெயர்களில் பதிவுசெய்தும் முறைகேடு நடந்துள்ளதை உழவர்கள் சுட்டிக்காட்டி முறையிட்டனர்.

மூன்று மணி நேரத்திற்கு மேலாக உழவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பூலாம்பாடி நெல்கொள்முதல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details