பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம், சிறுதானிய வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அப்படி சாகுபடி செய்யப்படும் பொருட்களை விவசாயிகள் மாவட்ட வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இதனிடையே விற்பனைக்கூட வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து பருத்தி, மக்காச்சோளத்துக்கு குறைவான விலைக்கு கேட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் யாரும் விற்பனைக்கூட ஏலத்தில் கலந்துகொள்ளாமல் வெளி சந்தைகளுக்கு தங்களது விளைபொருட்களை விற்க படையெடுத்துள்ளனர்.