விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறு தானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
மழையை நம்பியே மானாவாரி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு, சோள கதிர்கள் அடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
மக்காச்சோளம் கதிர் அடிக்கும் பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள் எளம்பலூர், எசனை, செஞ்சேரி, பாளையம், குரும்பலூர், பேரளி, சித்தளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோளக்கதிர்கள் அடிக்கும் பணி நடைபெறுகிறது. மேலும் அறுவடை செய்யப்பட்ட சோளக்கதிர்களை விவசாயிகள் சாலையில் காயவைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'வாழைத்தோட்டத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்' - கண்ணீர் விடும் விவசாயிகள்