கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தாண்டு முருக்கன்குடி, தண்ணீர் பந்தல், எளம்பலூர், லாடபுரம், சித்தளி, பென்னாகரம், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்மங்கிப் பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டது.
தற்போது கரோனா ஊரடங்கு எதிரொலியால் பூவை விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பூவைக் கொண்டுபோக போக்குவரத்து முடக்கப்பட்டதாலும் வேறு வழியின்றி சம்மங்கிப் பூவைப் பயிரிட்ட விவசாயிகள் டிராக்டர் கொண்டு பூவை அழித்துவருகின்றனர்.
பூவை டிராக்டர் கொண்டு அழிக்கும் அவலம் மேலும் சம்மங்கிப் பூவை மாடுகளுக்கும் போடுகின்றனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:காத்திருந்த விவசாயி... பொறுமையிழந்து விளைபொருட்களை சாலையில் கொட்டிய அவலம்!