பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவர், தனது குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், “நான் 2007ஆம் ஆண்டு மேலமாத்தூர் கிராமத்தில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சொத்தை அடமானம் வைத்து, விவசாயப் பணிகளுக்காக டிராக்டர் வாங்கினேன். தொடர்ந்து வங்கியில் மாதத் தவணை செலுத்தி வந்த நிலையில், 2008ஆம் ஆண்டு மத்திய அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்தது.
சொத்தை அபகரித்த வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி மனு! - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
பெரம்பலூர்: வங்கியில் வாங்கிய கடன் தொகையை முழுவதுமாகச் செலுத்தியும், தனது சொத்தினை தராத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி மனு
இந்தநிலையில் நான் கட்டிய பணத்தைத் வங்கி நிர்வாகம் திருப்பி தரவில்லை. மேலும் வங்கியில் எனது பெயரில் அடமான கடன் உள்ளதாக கூறி என்னுடைய சொத்தை பறிமுதல் செய்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. தவறான பரிவர்த்தனை மூலம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய சொத்தை மீட்டுத்தர வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.