கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே முகக் கவசம், கிருமி நாசினி போன்றவை இன்றியமையாததாக விளங்கி வருகின்ற நிலையில், இதன் தேவை அதிகரிப்பால் சில இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுவினர் தற்போது முகக் கவசம், கிருமி நாசினி, சோப் உள்ளிட்டவைகளை தயார் செய்து வருகின்றனர்.
மேலும், நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகக் கவசங்களை தயார் செய்தும் கிருமி நாசினி உள்ளிட்டவைகளை தயார் செய்தும் வருகின்றனர். தயார் செய்யப்படும் முகக் கவசம் உள்ளிட்டவைகளை கரோனா வைரஸ் - ஊரடங்கு தொடர்பான பணிகளில் ஈடுபடும் மருத்துவத்துறை, காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள், அரசின் பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்களுக்கு இலவசமாக கொடுக்கின்றனர்.
முக கவசம் மற்றும் கிருமி நாசினி தயாரிப்பு பணிகள் தீவிரம் மேலும் தேவைக்கேற்ப கூடுதலாக தயார் செய்வதற்கு தயார்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:அச்சமின்றி சுற்றுவோருக்கு முகக்கவசம் கொடுத்த காவல்துறையினர்!