பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் காரை மலையப்ப நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமூக குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் செயல்படும் ராமலிங்கம் கல்வி அறக்கட்டளையின் உண்டு உறைவிடப்பள்ளியில், 50 மாணவர்கள் படித்துவருகின்றனர்.
இப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நரிக்குறவ சமூக மாணவர்கள் உருவாக்கிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கிவைத்தார்.
அறிவியல் கண்காட்சியில் அசத்திய நரிக்குறவ மாணவர்கள்
கழிப்பறையின் அவசியம், சூரிய குடும்பம், சாலைப் பாதுகாப்பு, பசுமைக்குடில், மண்பானை தயாரிப்பு, கைத்தொழில் மழைநீர் சேகரிப்பு சத்துள்ள தானியங்கள், மூலிகைப் பொருள்கள், காற்றாலையிலிருந்து மின்சாரம் தயாரித்தல் போன்ற தலைப்புகளில், 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தியது வெகுவாகக் கவர்ந்தது. இக்கண்காட்சியை ராமலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாகி சுப்பிரமணியன், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: 'விவசாயம் மேம்பட்டால்தான் நாட்டில் பொருளாதாரம் உயரும்' - பி.ஆர். பாண்டியன்