பெரம்பலூர் நகர்ப்புற பகுதி எளம்பலூர் சாலை மேட்டு தெருவில் வசித்து வருபவர் வெங்கட்ராமன் (83). இவரது மனைவியின் பெயர் ஜலகம். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களுக்கு, பிள்ளைகள் இல்லை.
இதையடுத்து தம்பதியினர் இருவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஒருவருக்கு மட்டுமே முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறி வெங்கட்ராமனுக்கு வழங்கி வந்த முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டது.
வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த வெங்கட்ராமன், கரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலைக்குச் செல்லாமல், வருமானமின்றி தவித்து வந்தார். இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்தில், கடந்த மே 1ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.