தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 16, 2020, 7:30 PM IST

ETV Bharat / state

'கல்பனா சாவ்லா' விருது பெற்ற பெண்மணிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பெரம்பலூர்: சுதந்திர தின விழாவில் 'கல்பனா சாவ்லா' விருது பெற்ற பெண்மணிகளுக்கு, கிராம மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Enthusiastic welcome to 'Kalpana Chawla' award winning ladies!
Enthusiastic welcome to 'Kalpana Chawla' award winning ladies!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகேவுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நீரில் தத்தளித்த இளைஞர்களை, தங்களது சேலையை வீசி ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகிய மூன்று பெண்கள் காப்பாற்றினர். இவர்களது வீரதீரச் செயலைப் பாராட்டி நேற்று (ஆக.15) சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த பெண்மணிகளுக்கு "கல்பனா சாவ்லா" விருதை வழங்கி கவுரவித்தார்.

'கல்பனா சாவ்லா' விருது பெற்ற பெண்மணிகளுக்கு உற்சாக வரவேற்பு

இதையடுத்து விருது பெற்று சொந்த ஊர் திரும்பிய மூவருக்கும், ஆதனூர் கிராம மக்கள் மேளதாளம் முழங்க, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்கள் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கவுரவித்தனர்.

இதையும் படிங்க:'கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்குவர பல மாதம் ஆகும்'

ABOUT THE AUTHOR

...view details