பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை பகுதியில் அரவிந்த் என்பவர் வள்ளலார் ஹோண்டா விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் அரவிந்த் தனது அறையில் உள்ள லாக்கரில் கடந்த டிச. 05 ஆம் தேதி ஏழரை லட்சம் பணத்தை வைத்துள்ளார், டிச. 07 ஆம் தேதி வந்து பார்த்த போது பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.
வாகன விற்பனை நிலையத்தில் திருட்டு: ஊழியர் கைது!
பெரம்பலூர்: பாலக்கரையில் உள்ள ஹோண்டா விற்பனை நிலையத்தில் பணம் திருட்டில் ஈடுபட்ட கடையில் வேலை செய்த ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Employee cash theft
இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக பெரம்பலூர் காவல்துறையினர் கடை ஊழியர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில் கடையில் வேலை செய்து வந்த குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருட்டை ஒப்புக் கொண்டதால் அவரிடமிருந்து திருடப்பட்ட ஏழரை லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.