பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதைக் கண்டித்து துறையூர் பெரம்பலூர் சாலையில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கல்லூரியில் பாடப்பிரிவு நீக்கம் -மாணவர்கள் போராட்டம் - மாணவ, மாணவிகள்
பெரம்பலூர்: அரசு கலைக் கல்லூரியில் பாடப்பிரிவு நீக்கப்பட்டதைக் கண்டித்து மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போராட்டம்
அப்போது, பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கான படிப்பை அரசு திரும்ப தர வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.