தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டும், அலுவலர்களுக்கு வாக்குப் பெட்டியை எவ்வாறு கையால்வது குறித்து பயிற்சி நடைபெற்றது.

Tamilnadu election
election counting center

By

Published : Dec 13, 2019, 12:37 PM IST

தமிழ்நாட்டில் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது, வாக்குபதிவு செய்யப்பட்ட வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதனிடையே பெரம்பலூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை துறையூர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்படுகிறது.

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா மேற்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு நிகழ்வில் திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஆட்சியாளர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் வாக்குப் பெட்டியை எவ்வாறு திறப்பது, எவ்வாறு சீல் வைப்பது என்பன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் அலுவலர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள் பதில் அளித்தனர். அலுவலர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது, இதில் ஏராளமான அலுவலர்கள் கலந்துகொண்டு சகல சந்தேகங்களையும் கேட்டு பதில் தெரிந்து கொண்டனர்.

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

இதையும் படிக்க: வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை - தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details