பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைகுடிகாடு என நான்கு பேரூராட்சிகள் உள்ளன.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அனைத்துத்துறை பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தா பேரூராட்சி, நகராட்சி வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை வெளியிட்டார்.
வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியீடு மேலும், நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்குச்சாவடி மையங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கண்டறியப்பட்டு சரி செய்யப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். இதில் திட்ட இயக்குநர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பியடித்து சிக்கிய மாணவர்கள்