தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் போன்றவற்றை விநியோகிப்பதைத் தடுப்பதற்காக வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், பெரம்பலூர் அருகேபேரளி டோல்வே பகுதியில் ஸ்டீபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், காவல் துறை காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர்ரங்கராஜன் தலைமையில் காவல் துறையைச் சேர்ந்த குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக திருச்சியிலிருந்து வந்த டாடா சஃபாரி TN-31BU-0585 என்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கோடிக்கணக்கில் பணம் மறைத்து வைத்த கொண்டுவந்தது தெரியவந்தது. அந்த வாகனத்தில்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி தங்கதுரை மற்றும் அவருடன் மூன்று பேர் உடனிருந்தனர்.