தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்ககோரி போராட்டம்! - விவசாயிகள் மானியம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் விவசாயிகள் போராட்டம்

By

Published : Feb 15, 2019, 11:29 PM IST

பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவோடு, விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 50% சதவிகித மானியத்தில் மாட்டுத் தீவனம் வழங்க வேண்டும், பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

பெரம்பலூர் விவசாயிகள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details