தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மானாவாரி நிலங்களில் பெருவாரியான மாநிலங்களில் சாகுபடி செய்து வரும் பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்டதாக விளங்குகிறது.
வறட்சி மற்றும் நீர்மட்ட குறைவு குறித்த ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவும் வறட்சி மற்றும் நீர்மட்டம் குறைவு தொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய நீர்வள ஆதாரத் துறை கூடுதல் செயலாளர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம், பெரம்பலூர் ஆகிய என நான்கு வட்டாரங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நீர்மட்டம் குறைவு காரணமாக பாசனக் கிணறுகள் வற்றி காணப்படுகிறது. மாவட்டத்தில் நிலவும் நீர்மட்ட குறைவு குறித்த ஆலோசனை கூட்டம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தில் தடுப்பணைகளின் நிலைமை மற்றும் ஏரிகள் உள்ளிட்டவைகளின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், நீர் மட்டம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.