கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. அரசின் முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
'டாஸ்மாக் கடைகளைத் திறக்காதே' - விசிக போராட்டம் - Perambalur District News
பெரம்பலூர்: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அவரவர் வீட்டில் இருந்து குடும்ப உறுப்பினர்களோடு கலந்து கொள்ளும் போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்புச் செயலாளர் கிட்டு, அவரது வீட்டின் முன்பு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க:அடிபணிவோம் அவசிய கட்டளைக்கு... அறிவுரை கூறும் தமிழிசை