பெரம்பலூர் மாவட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆகஸ்டு 24ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தை போல, திமுக நேற்று பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது.