பெரம்பலூர்: திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் சுற்றுபயணத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்துப் பேசிவருகிறார்.
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் சுற்றுப்பயணம் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
முன்னதாக அரியலூரிலிருந்து வருகைதந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, மேலமாத்தூர் கிராமத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை அதனைத் தொடர்ந்து குன்னம் பகுதிகளில் பொதுமக்களுடன் சந்திப்பில் பேசிய திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்டியது போல், வருகின்ற சட்டப்பேர்வைத் தேர்தலிலும் பாடம் புகட்ட வேண்டும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சாலை டெண்டர் எடுப்பதில் 6,000 கோடி ஊழல் செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
அப்போது, திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உடன் இருந்தார். இந்த நிகழ்வை முடித்துக்கொண்டு அந்நூர், பரவாய் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்திக்கும் உதயநிதி, தொடர்ந்து வடக்கலூர் கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இதையும் படிங்க: ’அரசியல் நோக்கங்களுக்காக செயல்படும் கட்சியில் இருக்க முடியாது’ - மக்கள் நீதி மய்யத்தைத் தாக்கும் அருணாச்சலம்