தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பெரியார், அண்ணா, கலைஞரின் வரலாற்றைப் படிக்க வேண்டும்’ - ஆ.ராசா அறிவுறுத்தல்! - ஆண்டிமுத்து ராஜா

பெரம்பலூர்: பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூவரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து தங்களை செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திமுக இளைஞரணி கூட்டத்தில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா பேசியுள்ளார்.

dmk raja speech in Perambalur youth wing meeting

By

Published : Sep 30, 2019, 10:49 PM IST

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திமுக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், மத்தியமுன்னாள் அமைச்சருமான ஆ.ராசா கலந்துகொண்டு திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய ஆ.ராசா, "அன்றைய காலத்தில் கலைஞரின் பேச்சை கேட்க டைனமோ இல்லாத சைக்களில் பத்து கிலோமீட்டர் வந்து கேட்போம். ஆனால் இன்று அறிவியல் வளர்ச்சியால் உங்கள் வீட்டிலேயே எல்லாம் கிடைக்கிறது.

ஆ. ராசா பேச்சு

ஆனால், நம்மிடத்தில் கொள்கை பற்று குறைந்துகொண்டே வருகிறது. தற்போது உள்ள இளைஞர்கள் சுயநலத்திற்காக சிந்திக்காமல் ஒரு நாளில் சில நிமிடங்களாவது பொதுநலத்திற்காக சிந்தித்து செயல்பட வேண்டும்.

இளைஞர்கள் தங்களைச்சுற்றியுள்ள மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். அது தான் உங்களை உயர்த்தும். மேலும், கலைஞர், அண்ணா, பெரியார் ஆகிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து தங்களை செழுமைப்படுத்திக் கொண்டால் எதிர்கால வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல இடம் உண்டு” என்றார்.

இதையும் படிங்க: ‘இந்திய இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் நீட் தேர்வு’ - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details