பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய பாஜகவையும், அந்த சட்டத்திற்கு ஆதரவளித்த அதிமுக அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.பி. ஆ.ராசா கலந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, அதிமுக அரசுகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதனைத்தொடர்ந்து ஆ. ராசா பேசுகையில், ”இந்திய அரசிற்கு அடிநாதமாக உள்ளது அரசியலமைப்பு சட்டம். இச்சட்டத்திற்கு எதிராக இந்த குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றி உள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் சூழ்நிலையில், சட்டத்தை ஆதரித்து அதிமுக பச்சை துரோகம் செய்துள்ளது.