தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் சட்டங்கள் தொடர்பில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - எல். முருகன் - L. Murugan

பெரம்பலூர் : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - எல். முருகன்
பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் எல். முருகன்

By

Published : Dec 22, 2020, 8:25 PM IST

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு பாஜக சார்பில் ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற வாசகத்தை முன்வைத்து மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் கூட்டம் நடத்தி, பரப்புரை செய்துவருகின்றோம்.

விவசாயிகளை சந்தித்து மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத் திருத்தங்கள் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறோம்.

கடந்த 16ஆம் தேதி தொடங்கி வருகின்ற 25ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறும். மேலும், வேளாண் சட்டங்களை எடுத்து கூறி திமுகவின் போலி முகத்தை மக்களுக்கு அம்பலப்படுத்து வருகின்றோம். எதிர்க்கட்சிகளால் பாஜக தலைமையிலான மத்திய அரசின் நல்லாட்சியை பொறுத்து கொள்ள முடியவில்லை.

பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் எல். முருகன்

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னதை தான் தற்போது பாஜக சட்டமாக்கி உள்ளது. திமுக இரட்டை வேடம் போடுகின்றது. தற்போது பாஜக, அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் திட்டமிடப்பட்டு அரசுக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட போராட்டமாகும்.

இந்த போராட்டத்தில் நக்சல்கள் ஊடுருவி உள்ளனர். தனி நாடு கோறும் பிரிவினைவாதிகள் இந்த போராட்டத்திற்கு பின்னால் உள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து மதத்தை எல்லை மீறி இழிவுபடுத்தியத்தற்காக திமுக தலைவர் ஸ்டாலின் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க :ஒகேனக்கல் நீர்வரத்து குறைந்தது!

ABOUT THE AUTHOR

...view details