தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக தொண்டரை திட்டிய ஆ.ராசா! - திமுக எம்பி ஆ.ராசா பேச்சால் சர்ச்சை

பெரம்பலூர்: வேளாண் சட்டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தொண்டரை ஆ.ராசா திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

a.rasa
a.rasa

By

Published : Sep 29, 2020, 8:06 PM IST

மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பலரும் பல்வேறு இடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்த வகையில் பெரம்பலூரில் நேற்று (செப்.28) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டார். வேளாண் சட்ட மசோதா குறித்து ஆ.ராசா பேசிய போது திமுக தொண்டர் ஒருவர் ’ஆ.ராசா வாழ்க’ என்று முழக்கமிட்டது, அவரது பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த ஆ.ராசா " தொண்டரை பார்த்து திட்டினார்.

திமுக தொண்டரை திட்டிய ஆ.ராசா

திமுக தொண்டரை ஆ.ராசா திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details