பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் உணவு பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறை சார்பில் உணவக உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சௌமியா சுந்தரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உணவக உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை தரம் குறித்தும், உணவகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரம் தொடர்பான நடைமுறைகளில் கடைபிடிப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் துறை அலுவலர், நாங்கள் உணவகங்களுக்கு ஆய்வுக்கு வரும்போது அதிமுக, திமுக எனக் கட்சியின் பின்புலத்தைக்கூறி ஆய்வுப் பணிகளைத் தடுக்கக்கூடாது என்று கூறினார். அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசிய திமுகவைச் சேர்ந்த உணவக உரிமையாளர், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.