பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் சிவபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின்போது டீ கடையில் டீ குடித்துக்கொண்டே மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.
‘ஸ்டாலினின் பாட்சா என்னிடம் பலிக்காது’ - ஓபிஎஸ் - பாட்சா
பெரம்பலூர்: திமுக தலைவர் ஸ்டாலினின் பாட்சா என்னிடம் பலிக்காது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
ஆனால், நான் டீ கடையே நடத்தியவன். எனவே அவருடைய பாட்சா என்னிடம் பலிக்காது. திமுக கூட்டணி வெற்றுக் கூட்டணி, அவர்கள் இந்த தேர்தலில் தோல்வியை சந்திப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.