பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று, கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் ஸ்டாலின் பற்றியும், முதலமைச்சர் பற்றியும் நான், அரசியல் குழந்தைகளாக மட்டுமே உருவகப்படுத்தி பேசிய பேச்சுகள், வெட்டியும் ஒட்டியும் சமூக வலைதளங்களில் தவறாக சித்திரிக்கப்பட்டு பரவிவருகிறது.
’முதலமைச்சரை ஒருபோதும் கொச்சைப்படுத்தி பேசவில்லை’ - தேர்தல் பரப்புரை
பெரம்பலூர்: முதலமைச்சர் குறித்து பேசிய பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும் சித்திரித்து சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பிவருவதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா விளக்கமளித்துள்ளார்.
என்னுடைய பேச்சின் சாரம் திமுக தலைவர் ஸ்டாலின், அரசியல் மற்றும் கட்சியில் படிப்படியாக வளர்ந்தவர் என்பதும், முதலமைச்சர் பழனிசாமி குறுக்குவழியில் சசிகலாவின் காலைத்தொட்டு வளர்ந்தவர் என்பதும்தான். அந்த அரசியல் குழந்தை இப்படித்தான் வளர்ந்தது என்று உருவகப்படுத்தி பேசினேன். அவர்கள் இருவரின் ஆளுமை திறனை மட்டுமே உவமை படுத்தினேன். முதலமைச்சர் பிறப்பை ஒருபோதும் கொச்சைப்படுத்தி பேசவில்லை, அது முற்றிலும் தவறானது. அவ்வளவு தரக்குறைவாக நான் இருக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தாயாரையும் இழிவுபடுத்தும் திமுகவின் கருத்துகள் அருவருப்பானவை!'