பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட பிரபாகரன், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 882 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 90 ஆயிரத்து 846 வாக்குகள் பெற்றுள்ளார்.
பெரம்பலூர் தொகுதி: திமுக வேட்பாளர் பிரபாகரன் வெற்றி! - திமுக வேட்பாளர் பிரபாகரன் வெற்றி
பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பிரபாகரனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.
திமுக வேட்பாளர் பிரபாகரன் வெற்றி
31 ஆயிரத்து 36 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பிரபாகரனுக்கு பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜா சான்றிதழை வழங்கினார். அப்போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.