மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பலூர் வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மதக்கலவரத்தைத் தூண்டும் மோடி ஆட்சியை அகற்ற நீங்கள் ஒவ்வொருவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மதவாத கூட்டணிக்கா உங்கள் ஓட்டு? ஆ.ராசா கேள்வி - விடுதலை சிறுத்தைகள்
பெரம்பலூர் : மதக்கலவரத்தை தூண்டும் மோடி ஆட்சியை அகற்ற மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கோரிக்கை வைத்துள்ளார்.
ஆ ராசா
மேலும், திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரைத் தேர்ந்தெடுத்தால் நான் விட்டுச் சென்ற பணிகளைச் சிறப்பாகத் தொடர்வார் எனத் தெரிவித்த அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் வந்தவுடன் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.