தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரம்பரிய உணவு திருவிழாவை தொடங்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலர் - உணவு திருவிழா

பெரம்பலூர்: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கிவைத்தார்.

பாரம்பரிய உணவு திருவிழா
பாரம்பரிய உணவு திருவிழா

By

Published : Sep 30, 2020, 7:34 PM IST

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தொடங்கிவைத்தார்.

இந்த விழாவில் ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், சிறு தானிய வகைகள், சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு பண்டங்கள், கம்பு, கேழ்வரகு, திணை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள் செய்யப்பட்ட உணவு வகைகள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஊட்டச்சத்துள்ள சூப் வகைகள், உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையர் குமரி மன்னன், வருவாய் வட்டாட்சியர் பாரதி வளவன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details