பெரம்பலூர் டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் ஒலிம்பியா விளையாட்டு அகாடமி சார்பாக மழலையர்களுக்கான விளையாட்டுப் போட்டி இரண்டாவது ஆண்டாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இருந்து எல்கேஜி வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சிறுவர் சிறுமிகள் இதில் கலந்துகொண்டனர்.
விளையாட்டு போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள்! - ஒலிம்பியா விளையாட்டு அகாடமி
பெரம்பலூர்: ஒலிம்பியா விளையாட்டு அகாடமி சார்பாக நடைபெற்ற மழலையர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பெரம்பலூர்
நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் சிறுவர்-சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களோடு பரிசுகளும் வழங்கப்பட்டன
.