தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டிக்கு பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏழு அணிகள் பங்கேற்றன. ஓபன் முறையில் நடைபெறும் இந்த ஹாக்கி போட்டியில் வெற்றி பெறும் அணிக்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதன.