தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைம் சார்பில், உலகத் திறனாய்வுத் திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பயிலும் ஆறாம், ஏழாம், எட்டாம் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நேற்று எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில், நடைபெற்றது.
பெரம்பலூரில் களைகட்டிய தடகளப் போட்டி! - தடகள போட்டிகள்
பெரம்பலூர்: மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
Over 300 Students particapated in District level Athletic competition
இதில், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஓட்டப்பந்தயம் (100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்) உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'