குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர்: முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் ஏரி புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் உள்ள சின்ன ஏரி புனரமைப்பு பணி, களரம்பட்டி ஏரி புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரின் குடிமராமத்துப் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை இதன் மூலம் ரூபாய்3.48 கோடி மதிப்பீட்டில் 14 பணிகள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளின் பங்களிப்போடு புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் சின்ன ஏரியில் கரை பலப்படுத்தும் பணி, மதகு பழுது பார்க்கும் பணி, கடக்கால் பழுது பார்க்கும் பணிகள், எல்லைக்கல் நடும் பணிகள் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுகின்றன.
களரம்பட்டி ஏரியில் கடக்கால் பழுதுபார்க்கும் பணி, கரையை பலப்படுத்தும் பணி, எல்லைக் கல் நடும் பணி ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விவசாயிகள் பங்களிப்போடு நடைபெற்று வருகிறது.
லாடபுரம் சின்ன ஏரி புனர் அமைக்கப்படுவதால் 0.483 மில்லியன் கன அடி நீர் சேமிக்க படுவதோடு 58.240 ஹெக்டேர் விளைநிலங்களும், களரம்பட்டி எரி புனர் அமைக்கப்படுவதால் 0.384 மில்லியன் கன அடி நீர் சேமிக்க படுவதோடு 75.320 ஹெக்டேர் விளை நிலங்களும் பயன்பெறும்.
மேலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளின் கரைகளை படுத்துதல் வாய்க்கால்கள் தூர்வாருதல், சீமை கருவேல முள் செடிகள் அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இந்த ஆய்வின்போது பொதுப்பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.