பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியின் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நிதியிலிருந்து ரூ. 73 லட்சம் மதிப்பீட்டில், ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிட்டங்கி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
பெரம்பலூர்: வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் கிட்டங்கி கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த கிட்டங்கி விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் தானியங்கள் சேமிக்க பயன்படும் மேலும் விவசாயிகளின் வேளாண் விளைபொருள்கள் விலை குறைவாக இருக்கும் சமயத்தில் கிடங்கில் சேமித்து வைத்து மதிப்பு கூடும் போது அதனை பெற்று பயன் பெறலாம் எனவும் விளை பொருள்களை வைத்து விவசாயிகள் தானிய மற்றும் நகை, வீட்டுக்கடன் பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் வேப்பந்தட்டை வட்டார விவசாயிகள் தங்களது விளை பொருள்களை எளிதில் பாதுகாத்து பயன்பெற முடியும் எனவும் அரசு விதிகளுக்கு உட்பட்டு சரியான மற்றும் தரமானதாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த நேரத்திற்குள் பணியை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.