தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: ஊரக வளர்ச்சித் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளின் மூலம் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தா பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

பெரம்பலூரில் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூரில் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

By

Published : Sep 16, 2020, 4:17 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியின் மூலம் பல்வேறு வளர்ச்சித் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அடக்கம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டும் பணி, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் 5 லட்சம் ரூபாய் செலவில் வாகனம் நிறுத்தும் கட்டடம் கட்டும் பணி,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 19.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடைக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி, நபார்டு திட்டத்தின் கீழ் அடைக்கம்பட்டி முதல் நாகலாபுரம் வரை 1.650 கிலோமீட்டர் தொலைவிற்கு தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

அதனையடுத்து கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுக்கு 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின்கீழ் பெரம்பலூர் கால்நடை மருந்தக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடம் மொத்தம் எட்டு அறைகள், 2 ஆய்வக சோதனை பொருட்கள் தயாரிப்பு அறைகளுடன் இரண்டு தளங்களை கொண்டுள்ளதாகவும் கட்டப்பட்டுவருகிறது. இந்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கட்டப்படும் கட்டட பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

மேலும் பொதுமக்களின் வசதிக்காக உரிய தரத்துடன் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறையின் செயற்பொறியாளர் செந்தில்குமார் கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் குணசேகர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details