பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரிடம் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 440 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கத் தேவையான மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் இரண்டாம் கட்ட பணிகளை தொடங்கிவைத்தார்.
இந்த மாத்திரைகள் 443 அங்கன்வாடி மையங்கள், 90 அரசு துணை சுகாதார நிலையம், 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 562 இடங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இப்பணியில் 90 மருத்துவ அலுவலர்கள், 87 கிராம சுகாதார செவிலியர்கள், 38 சுகாதார ஆய்வாளர்கள், 32 தன்னார்வலர்கள், 443 அங்கன்வாடி பணியாளர்கள் என 690 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.