கரோனா நோய் தொற்று பரவாமலிருக்க பெரம்பலூர் மாவட்டத்தில் முதன் முறையாக கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. கரோனா வைரஸ் நோய் தொற்று அபாயத்தால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
பெரம்பலூரில் "கிருமி நாசினி " சுரங்கப்பாதை - கிருமி நாசினி சுரங்கப்பாதையை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பார்வையிட்டார்
பெரம்பலூர்: கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க பெரம்பலூரில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க பெரம்பலூரில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது
இந்திலையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை அருகில் "கிருமி நாசினி " சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கிருமி நாசினி சுரங்கப்பாதை வழியாக வரும்போது அவர்களின் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின் அனுமதிக்கப்பட்டனர். இதனை அம்மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பார்வையிட்டார்.