கரோனா தொற்று பரவலை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் நகராட்சி சார்பில் நகர்ப்புறம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் குமரி மன்னன், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், நகரின் முக்கிய இடங்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பெரம்பலூர் வட்டாட்சியர் பாரதிவளவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
பெரம்பலூரில் கெடுபிடி காட்டும் அலுவலர்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அவசியம் இல்லாமல் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் முகக்கவசம், மாஸ்க் அணியவும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அறிவுறுத்தினார்.
மேலும், பெரம்பலூர் மாவட்ட எல்லைப் பகுதியான திருமாந்துறை, பாடாலூர், அல்லிநகரம், அடைக்கம்பட்டி, உடும்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா நெருக்கடிக்கு 2 கோடி நிதியுதவி அளித்த பவர் ஸ்டார்!