தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தள்ளுபடி விலையில் அம்மா மருந்தகம் திறப்பு! - Amma medical shop

பெரம்பலூர்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தள்ளுபடி விலையில் மருந்து வழங்கும் அம்மா மருந்தகம் கூட்டுறவு வங்கி சார்பில் திறக்கப்பட்டது.

medical
medical

By

Published : Feb 25, 2020, 3:40 PM IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு கூட்டுறவுத் துறை சார்பில் அம்மா மருந்தகம் திறக்கப்பட்டது. பெரம்பலூர் நகர்ப்புற பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வளாகத்தில் இம்மருந்தகம் திறக்கப்பட்டது.

தள்ளுபடி விலையில் அம்மா மருந்தகம் திறப்பு

இதனை குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இந்த மருந்தகத்தில் தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசு சினிமா விருதுகள் - அட்டகாசமான அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details