பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் கவிஞர் நிழலி என்பவரின் 'ஒப்பந்தம் இட்ட இரவு' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவருமான கௌதமன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கௌதமன் கூறியதாவது, கீழடி தமிழருடைய தாய்மொழி என்றும், தமிழர் நாகரிகத்தின் தொன்மைத் தொட்டிலை பலபேர் திசை திருப்பி கீழடி நாகரிகத்தின் வரலாற்றினை, அதன் உன்னதத்தை மடை மாற்றம் செய்ய நினைப்பது கண்டனத்துக்குரியது என கூறினார்.
மேலும் அமைச்சர் பாண்டியராஜன் கீழடி நாகரிகம் ஒரு பாரத நாகரிகம் என்று சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் கீழடி நாகரிகத்தின் ஆய்வுப் பணிகளை மத்திய அரசே தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மீண்டும் மத்திய அரசு கீழடி அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி, இந்த கீழடி நாகரிகத்தை வெளிக்கொணர செய்த அமர்நாத்தை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றார்.