பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வெங்கட்டான் ஏரியில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இணையத்தில் வைரலாகும் டைனோசர் முட்டை மீம்ஸ் இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி தூர்வாரும் பணி நடைபெற்ற போது சுமார் 100க்கும் மேற்பட்ட உருண்டைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இது டைனோசர் முட்டைகள் என்று பல்வேறு வதந்திகள் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் டைனோசர் முட்டை மீம்ஸ் இதனையடுத்து அருங்காட்சியக துறையினர் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இணையத்தில் வைரலாகும் டைனோசர் முட்டை மீம்ஸ் கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டை இல்லை என்றும், அம்மோ நைட் என்று சொல்லப்படுகின்ற கடல் வாழ் உயிரினமான நத்தை படிமம், இந்த உருண்டையான கல்லில் இறுகியதால் உண்டானவை என்று அருங்காட்சியக துறையினர் தெரிவித்தனர்.
இணையத்தில் வைரலாகும் டைனோசர் முட்டை மீம்ஸ் இணையத்தில் வைரலாகும் டைனோசர் முட்டை மீம்ஸ் இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் இது குறித்து பலவிதமான மீம்ஸ்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், பெரம்பலூரில் டைனோசர் நிஜமாகவே வாழ்வது போன்ற மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க:70 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை வெட்டியவர் மீது நடவடிக்கை!