பெரம்பலூர்மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, அருள்மிகு சேத்து மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் தேர்த்திருவிழா அக்டோபர் 23ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
வாலிகண்டபுரம் சேத்து மாரியம்மன் கோயில் திருவிழாவின் ஒருபகுதி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. சேத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்குப்பிறகு, மலர் அலங்காரத்தோடு திருத்தேரில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, அலகு குத்திக்கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
வாலிகண்டபுரம் சேத்து மாரியம்மன் கோயில் திருவிழாவின் ஒருபகுதி மேலும் தங்கள் குழந்தைகள் நோய் நொடியிலிருந்து பிழைக்க அவர்களுக்கு கரும்புள்ளி-செம்புள்ளி குத்தி விநோத நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். இதனையடுத்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்தனர். குழந்தைகளுக்கு கரும்புள்ளி குத்தி விநோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் அதேபோல், விவசாயம் செழிக்கவும் பக்தர்கள் கரும்பு உள்ளிட்ட பயிர்களைத்தேரில் கட்டினர். பக்தர்கள் சிலர், அம்மன் வேடமிட்டு நடனமாடினர். இந்நிகழ்வில் வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், பிரம்மதேசம் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: கரூரில் வேகத்தடையை அகற்றக்கோரிய வழக்கு: அதனை நீக்க மக்கள் எதிர்ப்பதாக அரசு பதில்