தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது.
முழுநேர ஊரடங்கு: ஆள் நடமாட்டமின்றி காணப்பட்ட பெரம்பலூர்! - பெரம்பலூரில் கரோனா தாக்கம்
பொது முடக்கம் காரணமாக, பெரம்பலூர் மாவட்டமானது ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப்ரல் 25) முழு ஊரடங்கு என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகள் அனைத்தும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பேருந்து நிலையங்கள், வீதிகள், கடைகள் ஆகியவை ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் ஊரடங்கை மீறி மருத்துவம் உள்ளிட்ட தேவைகளை தவிர இரு சக்கர வாகனத்தில் வருவோரது வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் தீவிர ரோந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.