தமிழ்நாடு முழுவதும் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க கொசுமருந்து அடித்தல், நன்னீர் தொட்டிகளில் மருந்து தெளித்தல், தண்ணீர் தேங்காமல் கவனித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, டெங்கு தடுப்புப் பணிகள் குறித்து நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.