உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற கரோனா வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக தமிழ்நாட்டில் நாள்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கரோனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை முறை அனுமதிக்க வேண்டி ஆர்ப்பாட்டம்!
பெரம்பலூர்: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை முறையை அனுமதிக்க வலியுறுத்தி தமிழ் பேரரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ் பேரரசு கட்சி
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு தமிழ் பேரரசு கட்சி சார்பில் மாவட்ட அசோக்குமார் தலைமையில் கரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்கு தமிழ்நாட்டில் சித்த மருத்துவ சிகிச்சை முறையை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் சித்த மருத்துவர்கள், தமிழ் பேரரசு கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.