பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு நிறுவனங்களில் மேலாண்மை இயக்குனர் பணியிடங்களை நிலை உயர்வு செய்யும் நடவடிக்கைகளால் ஏற்படும் 32 துணை பதிவாளர் மற்றும் 54 கூட்டுறவு சார் பதிவாளர் பணியிட இழப்புகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! - Co-operative Registrar Work Losses
பெரம்பலூர்: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அப்போது இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 11.9.2020 அன்று உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.